Nilavu Vanthu |
---|
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்
பண்பு கூட மாறினால்
ஆஆஹ்ஹா ஹஹ்ஹா
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்
பண்பு கூட மாறினால்
மாறட்டும் மனது போல போகட்டும்
ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ
வாழட்டும் வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ
போகட்டும் புதிய சுகம் காணட்டும்
காணட்டும் காலம் வரும் மாறட்டும்
காணட்டும் காலம் வரும் மாறட்டும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ
முடியட்டும் முடியும் போது முடியட்டும்
விடியட்டும் விடியும் போது விடியட்டும்
விடியட்டும் விடியும் போது விடியட்டும்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ