Ninaikka Therintha Maname

Ninaikka Therintha Maname Song Lyrics In English


நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா

மயங்க தெரிந்த
கண்ணே உனக்கு உறங்க
தெரியாதா மலர தெரிந்த
அன்பே உனக்கு மறைய
தெரியாதா அன்பே மறைய
தெரியாதா

நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா

எடுக்க தெரிந்த
கரமே உனக்கு கொடுக்க
தெரியாதா இனிக்க தெரிந்த
கனியே உனக்கு கசக்க
தெரியாதா

படிக்க தெரிந்த
இதழே உனக்கு முடிக்க
தெரியாதா படர தெரிந்த
பனியே உனக்கு மறைய
தெரியாதா பனியே
மறைய தெரியாதா


நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா

கொதிக்க தெரிந்த
நிலவே உனக்கு குளிர
தெரியாதா குளிரும்
தென்றல் காற்றே உனக்கு
பிரிக்க தெரியாதா

பிரிக்க தெரிந்த
இறைவா உனக்கு
இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா

நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா