Ninaitthathu Yaro

Ninaitthathu Yaro Song Lyrics In English


நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே

மனதில் ஒன்று விழுந்ததம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா

நானறியாத உலகினை பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே


பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்

பூவிழி மூட முடியவும் இல்லை
மூடிய போது விடியவும் இல்லை
கடலை தேடும் காவிரிப்போல்
கலந்திடவேண்டும் உன் மடிமேல்
இது புது சொந்தம் அன்பே

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்