Ninaitthathu Yaro Sad |
|---|
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
பாட்டுக்கொரு தலைவனும் நீ
ஏட்டுக்கொரு கலைஞனும் நீ
ஏற்றுக் கொள் என்னை என்னுயிரே
இணைந்த புறா பறந்ததென்ன
இமைகளை கண்கள் மறந்ததென்ன
நடந்த கதை நினைவில்லையோ
நான் உனை சேர மனமில்லையோ
இருவரின் பாதை ஒரு வழி போகும்
இனி வரும் காலம் இருவரை சேர்க்கும்
வரம் தர வேண்டி தவம் இருந்தேன்
வழியினை பார்த்து தனித்திருந்தேன்
பதில் தர வேண்டும் அன்பே
நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே
வாழ்க்கை இங்கே கனவுகள்தான்
கனவுக்குள் ஏது ஓர் கனவு
கவிதை எல்லாம் வார்த்தைகள்தான்
வார்த்தையில் ஏது கானல் வரி
மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே
மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே
இனிமேல் எந்தன் புதிய வழி
இதுதான் என்று புரிந்ததடி
எனைத் தொடராதே பெண்ணே
நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே
நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே
நீ தான் மறந்தாலும்
நினைவில் நான் அழிந்தாலும்
நடந்தவை யாவும் நடந்தவை தான்
நினைப்பது நான்தான் நீயில்லையே
மறந்தது நீதான் நானில்லையே
