Nirpathuve Nadapathuve

Nirpathuve Nadapathuve Song Lyrics In English


நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே நிற்பதுவே
நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனம் தானோ பல
தோற்ற மயக்கங்களோ
சொப்பனம் தானோ பல
தோற்ற மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே
கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே இளவெயிலே
மரச்சாிவே வானகமே இளவெயிலே
மரச்சாிவே நீங்களெல்லாம் கானலின்
நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ

வானகமே இளவெயிலே
மரச்சாிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ வெறும்
காட்சிப் பிழைதானோ

போனதெல்லாம்
கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே நிற்பதுவே
நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம்
தானோ பல தோற்ற
மயக்கங்களோ சொப்பனம்
தானோ பல தோற்ற மயக்கங்களோ


காலமென்றே ஒரு
நினைவும் காட்சியென்றே
பல நினைவும் கோலமும்
பொய்களோ அங்குக்
குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம்
மறையுமென்றால்
மறைந்ததெல்லாம்
காண்போமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும்
பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே நிற்பதுவே
நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம்
தானோ பல தோற்ற
மயக்கங்களோ சொப்பனம்
தானோ பல தோற்ற
மயக்கங்களோ

கற்பதுவே கேட்பதுவே
கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ