Noorandu Vazhum Kadhal Idhu

Noorandu Vazhum Kadhal Idhu Song Lyrics In English


ஹாஆஆஹாஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஹாஆ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅ

நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
பூங்காற்றை யார் திரை வைப்பது
பூ மேடை மீது ஆடும் போது

நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது

வாசம் வீசும் கொடி
வார்த்தை பேசும் கிளி
வாடும் சூழ்நிலை ஏன்
நீயும் நானும்
குளிர் நீரும் மீனும் என
சேரும் நாள் இது தான்

காலம் தோறும்
விழி நாலும் சேரும்
எனக் காதல் தீர்ப்பெழுது
தூக்கம் ஏது
உனைத் தீண்டிடாது
எனைக் தாக்கும் ராப்பொழுது

வாராய் பனிப் பூவாய்
உனை விழியில் சுமந்து நடப்பேன்
வந்தால் இடம் தந்தால்
உந்தன் மடியில் விழுந்து கிடப்பேனே


நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது
பூங்காற்றை யார் திரை வைப்பது
பூ மேடை மீது ஆடும் போது

நூறாண்டு வாழும் காதல் இது
நாள் தோறும் பாடும் பாடல் இது

மலையில் உருவாகும்
மேக மூட்டங்கள்
மனதில் உருவானதேன்

நதியில் உருவாத நீரின் ஓட்டங்கள்
விழியில் உருவானதேன்
இதழ்கள் பரிமாற இதயம் பசியாற
நான் தொடும் தாமரையே
முகில்கள் மறைத்தாலும் மோகம் குறையாது
வான் தொடும் கூன் பிறையே
காலமும் வாழ்வது காதலடி
காதலுக்கே இல்லை சாதலடி

காலமும் வாழ்வது காதலடி
காதலுக்கே இல்லை சாதலடி
தடுப்பவர் வந்தாலும் காதல் ஆவேசம்
பிடிப்பதை விடாதடி
தரையினில் எந்நாளும் நீல ஆகாயம்
தவறியும் விழாதடி
காதலியே கண்மணியே
கூண்டை விட்டு வா வெளியே
ஆனந்த வானத்தில் நாம் இனி பறந்திடவா