Odakaran Pattu Male

Odakaran Pattu Male Song Lyrics In English


தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா ஹேய்

ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே

ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்

ராமன் நடந்தானே காடு அந்த சீதை மகராசியோடு
தம்பி கிழிச்சானே கோடு அத தாண்டி தவிச்சாளே பேடு
கோட்டுக்குள்ளே நிக்காம கோபம் கொண்டு போகாதே
வீட்டுக்குள்ள தங்காம வாழாவெட்டி ஆகாதே

வெளிய வந்தா பொண்ணு மானம் நெலச்சிடுமா
நிலத்தில் வந்தால் செம்மீனு பொழைச்சிடுமா
உம் பேரு ரிப்பேரு ஆகாதோ மானே

ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்


பொண்ணா பொறந்தாக்கா யாரும்
ஒரு ஆணை மணந்தாக வேண்டும்
மானம் மரியாதை காக்க அந்த
மஞ்சக் கயிறொண்ணு போதும்

வம்பு தும்பு பண்ணாம சேத்துக்கடி மச்சான
அந்தி பகல் எப்போதும் போட்டுக்கடி முந்தான
வரப்பு ஒண்ணு இல்லாம வயலிருக்கா
ஒடம்பு ஒண்ணு இல்லாம நிழலிருக்கா
சிட்டே நான் சொன்னாக்கா தட்டாம கேளு

ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே

ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்