Odum Megangale

Odum Megangale Song Lyrics In English


ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ண
மயில் காவியத்தில் நான்
தலைவன் நாட்டிலுள்ள
அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன்

மாளிகையே
அவள் வீடு மரக்கிளையில்
என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ


ஊரெல்லாம்
தூங்கையிலே
விழித்திருக்கும் என்
இரவு உலகமெல்லாம்
சிரிக்கையிலே அழுதிருக்கும்
அந்த நிலவு

பாதையிலே
வெகு தூரம் பயணம்
போகின்ற நேரம் காதலை
யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ