Oh Penne Thamizh Penne |
---|
இசையாமைப்பாளர் : தேவா
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
கலவையில் என்ன கலந்தானோ
பிரம்மன் உன்னை படைக்க
கடலில் நுரையினை எடுத்தானோ
அழகே உன்னை வடிக்க
இதழில் பழரசம் வடித்தானோ
தினமும் நான் சுவைக்க
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
காற்றும் வெயிலும் துடித்தாலும்
கடலின் அளவு குறைவதில்லை
பல பல கோடி உயிர் துகித்தாலும்
இன்னும் காதலும் குறைவதில்லை
கடலின் நீலம் இல்லாமல்
வானம் வண்ணம் பெறுவதில்லை
மனம் உடைந்தாலும் காதல் இல்லா வண்ணம்
வாழ்வுக்கு வண்ணம் இல்லை
கடலுக்கு கீழும் பூகம்பம் நடக்கும்
காதலர் வாழ்வோடும் பூகம்பம் வெடிக்கும்
கடலின் தற்கொலை அதிகம்தான்
காதலின் கதையும் அதுவேதான்
கடலின் தற்கொலை அதிகம்தான்
காதலின் கதையும் அதுவேதான்
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
கடலில் ஓடி கலப்பதிற்க்கு
காற்றில் நதிகள் ஊற்றெடுக்கும்
அட காதல் கரை சேர்ந்து கலப்பதிற்க்கு
மண்ணில் உயிர்கள் பிறபெடுக்கும்
மூன்று பாகம் கடல் இருந்தும்
நிலத்தில் தாகம் தீரவில்லை
நம் வழிதோறும் காதல் இருந்தாலும்
இன்னும் வாழ்க்கை நிறையவில்லை
மீனவருகெல்லாம் கடல்தான் தெய்வம்
மானிடர்கெல்லாம் காதல்தான் தெய்வம்
கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
ஓ ஹோ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே
கலவையில் என்ன கலந்தானோ
பிரம்மன் உன்னை படைக்க
கடலில் நுரையினை எடுத்தானோ
அழகே உன்னை வடிக்க
இதழில் பழரசம் வடித்தானோ
தினமும் நான் சுவைக்க
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
அடடா அடடா அழகிதுவா
அலைகடல் மோதும் இடை இதுவா
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே
செங்கடல் முத்து உன் கண்ணே