Oho Ho Odum Ennangale |
|---|
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களேன்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களேன்
வருஷம் தோறும்
வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில்
மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம்
பிள்ளை போலே ஆடலாம்
ஆடி ஆடி காலம் மாறி
அன்னை தந்தை ஆகலாம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களேன்
நீரும் மாறும்
நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை
அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக
இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது
பாசதீபம் காணுவோம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களேன்
