Ondru Engal Jadhiye |
|---|
இருவர் : ஆஹாஆஹா
ஆஹாஆஹா
ஒஓஹோ
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
இருவர் : மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
ஆஹா
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்
ம்ஹும்
நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்
இருவர் : வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
இருவர் : மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
இருவர் : இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
ஆஆஅஹஹாஅஹ்ஹா
லாலலா லாலலாஆஆ
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
