Onna Irukka Kathukanum |
---|
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
வீட்டை விட்டு வெளியே வந்தால்
நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சி
நடந்துகிட்டா
நல்லா இருக்கலாம்
வீட்டை விட்டு வெளியே வந்தால்
நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சி
நடந்துகிட்டா
நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும்
நாடகத்தை நிறுத்த முடியுமா
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
தன்னைப்போல பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
தன்னைப்போல பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை
பொன்னைப்போல மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல்
மனிதன் வேறில்லை
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
கொஞ்ச நேரம் காற்றடித்து
ஓய்ந்து போகலாம்
வானில் கூடி வரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து
ஓய்ந்து போகலாம்
வானில் கூடி வரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம்
இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம்
இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால்
நன்மை அடையலாம்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்