Oomai Penn Oru

Oomai Penn Oru Song Lyrics In English


ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

வெளியே சொல்லவும்
மொழி இல்லை
வேதனை தீரவும் வழி இல்லை

ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார் யார் அறிவார்

பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார்
குழந்தைகள் எண்ணத்தை
யார் அறிவார்
அந்த குலமகள் ஆசையை
யார் அறிவார்

ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள் மகிழ்ந்திருப்பாள்

உயிரற்ற கொடியில்
மலர்ந்திருந்தால்
அவள் ஒரு நாள் ஆவது
மகிழ்ந்திருப்பாள்
உலவும் காற்றாய்
பிறந்திருந்தாலும்
அவள் ஒவ்வொரு நாளும்
வாழ்ந்திருப்பாள்


ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள் கலந்து விட்டாள்

மானிட ஜாதியில்
பிறந்து விட்டாள்
அவள் மானிட தர்மத்தில்
கலந்து விட்டாள்
மண்ணில் வாழவும் முடியவில்லை
அந்த வானத்தில் பறக்கவும்
சிறகு இல்லை

ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

வெளியே சொல்லவும்
மொழியில்லை
வேதனை தீரவும் வழி இல்லை

ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்