Oor Oora |
---|
ஆஆஆஆஆஅ
ஆஆஆஅ
ஊர் ஊரா போகும்
இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும்
இந்த மனசு
ஊர் ஊரா போகும்
இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும்
இந்த மனசு
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
என் ராசாவே
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
செக்கு மாடு போல
சுத்தி சுத்தி ஆடும்
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
என் ராசாவே
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
ஏதோ ஒரு மூலையிலே
ஏங்கும் உசுரு
வீணாக என் ஒடம்ப
தாங்கும் உசுரு
காரணம் கேளு
அது பாடுது பேரு
தேர் ஒண்ணு காத்திருக்கு
ஊர்வலத்துக்கு
உன்னுடன் தானா இல்லை
நான் மட்டும் தானா
வேதம் கேட்கும் காதுக்குள்ளே
ஏழை நாதம் கேட்காதா
மாதம் தேதி நாட்கள் எல்லாம்
இன்று நியாயம் கூறாதா
காட்டுல வரையில
ஆத்துல வயலுல நீதானே
அலையிற மனசுக்கு ஆறுதல்
தருவது நீதானே நீதானே
ஊர் ஊரா போகும்
இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும்
இந்த மனசு
தோளில் கருகாமணி
விம்மி ஆடுது
தூங்காத கண்ணு மணி
ஒன்ன தேடுது
நான் படும் பாடு
அதை யார் அறிவாரோ
நாடோடிப் பாட்டு
ஒண்ணு யாரத் தேடுது
நீ போகும் பாதை
அதுதான் தேடுது
நீ இல்லாத ஊர் கொண்டாடும்
நாளும் எனக்கு திருநாளா
காப்புக் கட்டி கரகம் ஆட
அம்மன் அருளைத் தருவாளா
சேத்துல நான் நட
நாத்துல தெரிவது நீதானே
காத்துல மழையில அனுதினம்
தொடுவது நீதானே நீதானே
ஊர் ஊரா போகும்
இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும்
இந்த மனசு
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
என் ராசாவே
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
செக்கு மாடு போல
சுத்தி சுத்தி ஆடும்
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
என் ராசாவே
உன்னை விட்டு
வேறெங்கும் போகாது
ஊர் ஊரா போகும்
இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும்
இந்த மனசு