Oorkolam Pogindra Kili

Oorkolam Pogindra Kili Song Lyrics In English




ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை

இது ஒரு வாழ்வு இனிமையைக் காண
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண
அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று

கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று
கோவை ரசம் ஊற்று


ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓடும்

ரதியெனும் தேவி
ரகசியம் பேச
ரதியெனும் தேவி
ரகசியம் பேச
மதனெனும் தேவன்
மடி விளையாட
இருவர் : நாதஸ்வரம் மேளம்
நதிகளிடும் தாளம்
நாதஸ்வரம் மேளம்
நதிகளிடும் தாளம்
தாலாட்டும் மேகம்தாளவில்லை மோகம்
தாளவில்லை மோகம்

இருவர் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று