Ooru Kettu Kidakkuthu |
---|
மற்றும் மலேசியா வாசுதேவன்
மாம்பழம் இல்லை என்று
சாம்பலை பூசிக் கொண்டு மாமலை ஏறிய
பார்வதி பாலனே
ஆண்டியின் வேடத்தை
தாங்கிய சீரனே
நான் தொழுதேன் உன்னையே
வடிவேலவனே காத்தருள்வாய் என்னையே
ஊர் நடப்பைச் சொல்லவா
தவக் கோலம் விட்டு
சீர் திருத்தம் செய்ய வா
நாராயண நாராயண நாராயண
வாரும் நாரதரே என்ன விஷயம்
முருகா தமிழ் அழகா
செந்தில் குமரா
ஒரு மாம்பழத்துக்காக
உன் தாய் தந்தையிடம்
கோபித்துக் கொண்டு நீ இப்படி வரலாமா
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா
இது தப்பையா (வசனம்)
நாரதரே நீ வருவீர் என்று
நான் எதிர் பார்க்கவில்லை
ஒன்று இரண்டு மூன்று என்று
வரிசைப் படுத்திப் பாட
ஔவைப் பாட்டி வரவில்லை(வசனம்)
அந்தம்மாவுக்கு வயசாயிடுச்சு
கைல வெச்சிருந்த குச்சிய வேற
எவனோ புடிங்கிட்டு போயிட்டான்
அதனால வர முடியல
இப்பொழுது நீ உடனே
கைலாசத்துக்கு வர வேண்டும்
என்றுமே இல்லாமல் இந்த பூலோகத்தில்
இப்பொழுது ஏகப்பட்ட பரபரப்பான ஒரு
குழப்பம் ஏற்பட்டிருக்கிறது
அதனால் நீ தேவலோகத்திற்கு வந்து
உன் தாய் தந்தையை சந்தித்து
இது விஷயமாக ஒரு டிஸ்கஷன் செய்து
ஒரு டிசிஷனுக்கு வர வேண்டும்
ஆண்டிக் கோலத்தை கலைத்துக் கொண்டு
என்னோடு வா (வசனம்)
நாரதா நீர் என்ன சொன்னாலும்
யாம் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (வசனம்)
நாராயண நாராயண (வசனம்)
ஊரு கெட்டு கெடக்குதையா
ஆறுமுக நாயகனே
பாத கெட்டு நடக்குதையா
ஏறு மயில் வாகனனே
பூலோகப் பெருமை எல்லாம் போச்சுது
பொய்யர்கள் காலம் என்று ஆச்சுது
யாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே
நீதி நியாயம் இல்லே முருகையா
நீதான் வேல் எடுத்து வருவியா
ஊரு கெட்டு கெடக்குதையா
ஆறுமுக நாயகனே
பாத கெட்டு நடக்குதையா
ஏறு மயில் வாகனனே
ஏராளம் சாதிதான்
எல்லாமே மோதிதான்
போராட நாறிடிச்சு வீதிதான்
ஆளாளு கட்சிதான்
அங்கங்கே வெச்சுதான்
கோளாறு ஆயிடுச்சு வீதிதான்
திண்ணப் பேச்சு வீரம்தான்
தில்லு முல்லு காரம்தான்
மச்சு வீட்டில் வாழுற
காலம் ஆச்சு
பாட்டாளிங்க பாடுதான்
சொன்னா வெக்கக் கேடுதான்
குச்சு வீட்டில் வாழுற
கோலம் ஆச்சு
நீ பாத்து இத மாத்து
வடிவேலவா வா
வேலாயுதம் நீ தூக்கணும்
பொய் வேஷங்கள தூளாக்கணும்
ஊரு கெட்டு கெடக்குதையா
ஆறுமுக நாயகனே
பாத கெட்டு நடக்குதையா
ஏறு மயில் வாகனனே
உச்சியில மொட்டதான்
உத்ராட்சக் கொட்டதான்
நெத்தியில பூசியதேன் பட்டதான்
எல்லாமே விட்டிடு
என் கூட வந்திடு
ஏன்யா உன் அப்பன் கூட சண்டதான்
அப்பன் புள்ள சேரணும்
கோப தாபம் மாறணும்
மக்கள் குறை தீரணும்
உங்களாலே
பாரத்த காக்கணும்
பட்ட மரம் பூக்கணும்
பன்னிரெண்டா மின்னுற
கண்களாலே
ஏய் கந்தா நீ வந்தா
நல்ல நேரம்தான் வா
பண்டாரமா ஏன் நிக்கணும்
அந்த தண்டாயுதம் ஏன் தூக்கணும்
ஊரு கெட்டு கெடக்குதையா
ஆறுமுக நாயகனே
பாத கெட்டு நடக்குதையா
ஏறு மயில் வாகனனே
பூலோகப் பெருமை எல்லாம் போச்சுது
பொய்யர்கள் காலம் என்று ஆச்சுது
யாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே
நீதி நியாயம் இல்லே முருகையா
நீதான் வேல் எடுத்து வருவியா
நீதி நியாயம் இல்லே முருகையா
நீதான் வேல் எடுத்து வருவியா