Oorukku Uzhaithaal

Oorukku Uzhaithaal Song Lyrics In English


ஊருக்கு உழைத்தாள்
சட்ட ஒழுங்கு அதை காத்தாள்

காவல் துறைக்கே
இவள் கண்ணியம் சேர்த்தாள்
தர்ம தேவதை
இவள் தர்ம தேவதை

காவல் நிலையம் எல்லாம்
கோவில் என கண்ட மகள்
அங்கு தெய்வத்தைக் காணாமல்
கண் கலங்கிப் போகின்றாள்

வேலியே பயிர்களை
மேய்வது கண்டாள்
வெந்தாள் நொந்தாள்
வெளியேறி வந்தாள்


நீதி வழி நின்ற மகள்
வீதி வழி புறப்பட்டாள்
பாதி வழி வருகையிலே
பகைவரிடம் அகப்பட்டாள்

புலியை சாய்ப்பதற்கு
பூனைகள் வந்ததம்மா
விளக்கை அணைப்பதற்கு
விட்டில்கள் வந்ததம்மா
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்
மறுபடியும் தருமம் வெல்லும்
ஞாயங்கள் சாவதை
நீதி நிலை குலைந்து போவதை
பொறுப்பாளோ மாட்டாளோ தர்ம தேவதை