Oru Devathai Paarkum

Oru Devathai Paarkum Song Lyrics In English




ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது

இதயமேஓ
இவளிடம்ஓ
உருகுதேஓஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
பார்க்காதேஓஎன்றாலும் ஓ
கேட்காதே ஓ ஹோ ஓ

என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ
பொல்லாதது
புரிகின்றதுஓஹோ ஓ

ஓஓகண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே


மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓஓ

இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே
அது தூங்கும் போதிலும்
தூங்காதே

ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது