Oru Koyilin Iru Deepangal |
|---|
ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன
ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன
பூவுடன் மஞ்சள்
நீ கொடுத்தாய்
புண்ணியன் உன்னால்
நான் ஒரு தாய்
பூவுடன் மஞ்சள்
நீ கொடுத்தாய்
புண்ணியன் உன்னால்
நான் ஒரு தாய்
நிலைத்து வாழும் காவியம்
நீயும் நானும்தான்
இருக்கும் பொருத்தம்
இடையேன் வருத்தம்
ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன
காதலி ராதை ஒரு கரையில்
கண்ணனும் நின்றான்
மறு கரையில்
கரைகள் இரண்டை வகுத்தது
காலம் நேரம்தான்
சுமைகள் குறைந்தால்
சுகங்கள் வரலாம்
ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன
