Oru Maalai Neram

Oru Maalai Neram Song Lyrics In English


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஓஹோஆஹ்ன்
ஆஹாஉஉஆ

ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு

வழிதோறும் பூக்கள்
வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி
காதில் பாடும் தாலாட்டு

இதழோரம் இதழோரம்
புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே
சில நாளாய் நானே

கதவோரம் தலை நீட்டி
தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே
என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க

ஓஹோஆஹ்ன்
ஆஹாஉஉஆ
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு

தினம் உனை பார்க்கும்போது
இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே
ஐய்யோ அது அழகானது

ஓதனிமையில் நீயும் நானும்
கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம்
புதிதானது

அச்சமா நானமா
அன்பிலே கொல்வதா
ஹே ஏ ஹே
உன்னிடம் இழுத்தது எதுவோ
ஹே ஏ ஹே
தெரியலயே


ஹேய் எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது

எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது

ஓஹோஆஹ்ன்
ஆஹாஉஉஆ

ஓமழை வரும் நேரம் முன்பு
தரை வரும் காற்றைப் போல
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே
ஜில்லென்று நீ

தூவும் மழை நின்ற பின்பு
தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய்
என்றென்றும் நீ

ஓ கண்களா கன்னமா
பார்வையா வார்த்தையா
உன்னிடம் பிடித்தது எதுவோ
தெரியலயே

எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது

ஓஹோஆஹ்ன்
ஆஹாஉஉஆ

ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு