Oru Melliya Kodu |
---|
ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே
ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே
நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று
ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே
ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே
நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று
இத்தனை நாள் சத்தமிடா
நெஞ்சில் எத்தனையோ இசைக் கருவி
என் மனமும் அதிலே
இசைக்கிறதே ஸ்வரமே
புத்தகமாய் புத்தழகே உன்னை
பத்திரமாய் ஏந்துகிறேன்
முன்பனியாய் விழுந்தாய்
கண்மணியில் கலந்தாய்
இந்த நாள் வரும் என்றே
நான் காத்திருந்தேனே
அடி நீ வரும் பாதை
அதில் பூத்திருந்தேனே
இருள் ஆகாதா
இதழ் சேராதா
எந்தன் ஆசைதான்
இன்று தீராதா
ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
ஒரு மெல்லிய கோடு
ஒரு மெல்லிய கோடு
நீ வரையும் கோடுகளை எல்லாம்
ஓவியமாய் மாற்றிடவா
கொஞ்சம் பொறு சொல்வேன்
கொஞ்சலினால் கொல்வேன்
உன் இமையும் என் இமையும்
ஒன்றாய் தூங்கட்டுமே இன்றிரவும்
மோகத்துடன் நீயும்
தாகத்துடன் நானும்
இவள் மர்மங்களாலே
எனை மயக்குகிறேளே
அதை உனக்கு விளக்கத்தான்
இவள் வளைந்து வந்தாளே
தள்ளிச் செல்லாதே
எனைக் கொல்லாதே
என்னைக் கேளாமல்
விடை சொல்லாதே
ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே
ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே
நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று
ஒரு மெல்லிய கோடு
என் நெஞ்சில் விழுந்ததே