Oru Naal Ninaivithu

Oru Naal Ninaivithu Song Lyrics In English


ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே

மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே

ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே

மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே

வா வா வா அன்பே வா
வா வா வா ராஜா வா

ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே

மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே

வில்லோடு நான்
அம்பாகவா
பெண் மானை
நீ குறி பார்க்கவா

பூ மீது வண்டாக
நான் மாறவா
விரல் மீட்டத்தான்
வீணை தடை கூறுமா

வண்டென்ன வரம் கேட்டு
வர வேண்டுமா
நிலம் கேட்டுத்தான்
மேகம் நீர் ஊற்றுமா

சந்தேகம் ஓடிப் போனதே
சந்தோஷம் கூடிப் போனதே

உற்சாகம் ஏறிப் போச்சுதே
நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்ததே

பண் பாடும்
காவியம்தான் இது
பாடிடும் நாள் இது
இளமை வேளையில்
இனிமை கூடியது

ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே

மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே


வா வா வா ராஜா வா
வா வா வா அன்பே வா

பெண் மற்றும்
ஆஹ்ஹ ஆஹா ஆஹா
ஆஹ்ஹ ஆஹா ஆஹா
ஆஹ்ஹ ஆஹா ஆஹா

லால லாலா
லாலா லாலா

கண்ணோடு நீ மணியாகவா
பெண்ணோடு நான்
துணை சேரவா

பல வேஷம் நீ போட்டு
எனை மாற்றினாய்
பெண் மனதிலே
காதல் தீ மூட்டினாய்

கலையான சிலை
ஒன்றை நான் தேடினேன்
உனைப் பார்த்ததும்
நான் சிலையாகினேன்

பெண் மானை
காளை வென்றதே
பொன்னான வேளை
வந்ததே

செல்வங்கள்
வாழ்வில் சேருமே
தெய்வங்கள்
வாழ்த்துக் கூறுமே

பண்பாடும்
காவியம்தான் இது
பாடிடும் நாள் இது
இளமை வேளையில்
இனிமை கூடியது

ஒரு நாள் நினைவிது
பல நாள் கனவிது
நினைக்க நினைக்க
மனம் இனிக்கிறதே

மண நாள் அழைக்குது
சுகமாய் இருக்குது
உனக்கும் எனக்கும்
இனி திருமணமே

வா வா வா அன்பே வா
வா வா வா ராஜா வா

ஓ மை லவ்
ஓ மை லவ்

ஆண் மற்றும்
ஓ மை லவ்
ஓ மை லவ்