Osai Varamal

Osai Varamal Song Lyrics In English


ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

மீசை படாமல்
மணி முத்தம் இடுங்கள்
ஆஹா ஓஹோ ஆஆ
மீசை படாமல்
மணி முத்தம் இடுங்கள்
மேனி கெடாமல் அதைக் கற்றுக் கொடுங்கள்

ஸ்ஸ்ம்ம்
ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

மரகத சிலையை
மடியினில் ஏந்தி
பனி மலர் உடலில் படகென நீந்தி

மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே
மந்திர பூசையில் மயங்கிடுவோமே

அந்தரங்க நாடகத்தின்
தந்திரங்கள் அனைத்தையும்
அந்தம் முதல் ஆதி வரை
என்று விளங்க

சிந்துக் கவி பாடி இளம்
பந்து விளையாட வரும்
சுந்தரனின் கைப்பிடியில்
வஞ்சி மயங்க

சூல் கொண்ட மேகம்
நீர்க் கொண்டு வார்க்க
நீர் கொண்ட பூமி
நெஞ்சார வாழ்த்த


தேன் கொண்ட கண்கள்
செவ்வண்ணம் காட்ட
பொன்மேனி வீணை
உன் கைகள் மீட்ட

ஸ்ஸ்ம்ம்
ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

நவரச கோலம்
முழுவதும் காட்டும்
நளின சிங்காரம்
மலர்களின் தோட்டம்

திருவடி தொடங்கி
தலை வரை தழுவ
கொடியிடை மீது
தொடர்கதை எழுத

ம்ஸ்

ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

ஓசை வராமல்
நாம்
உறவு
கொள்வோமே
ஓசை வராமல்
நாம்
உறவு
கொள்வோமே