Paada Therinthavar Paadungal |
|---|
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
ஆஅஆஆஹா(4)
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து
குவளை பூவில் விழி எடுத்து
கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து
குவளை பூவில் விழி எடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
வைகை அலையில் உடலெடுத்து
மதுரை தென்றல் நடை எடுத்து
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
{உறவுகளாலே
உலகங்கள்
உரிமைகளாலே
இதயங்கள்) (2)
பரிவும் பாசமும் பந்தங்கள்
பரிவும் பாசமும் பந்தங்கள்
என் பாப்பா வழியே சொந்தங்கள்
ஆஆஹா
ஆஆஆஹா
லல
லலல லலல லலலா லா லா லா
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
தந்தையின் மனைவி தாயாவாள்
அவள் தாங்கிய மழலை சேயாவாள்
தந்தையின் மனைவி தாயாவாள்
அவள் தாங்கிய மழலை சேயாவாள்
சிந்தனை செய்தேன் பொன் மகளே
சிந்தனை செய்தேன் பொன் மகளே
நீ தெய்வம் தந்த என் மகளே
ஆஆஹா(4)
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
