Paai Viriththathu |
---|
ஆஆஆஆஆஆஆஆ
பாய் விரித்தது பருவம்
பள்ளி கொண்டது இளமை
குரல் கொடுத்தது சேவல்
விழித்துக் கொண்டன கண்கள்
நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
ஆஹாஹஹாஆ
நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்
வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்
துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்
பாய் விரித்தது பருவம்
பள்ளி கொண்டது இளமை
குரல் கொடுத்தது சேவல்
விழித்துக் கொண்டன கண்கள்
வழிவழியாய் வந்த வழக்கப்படி
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி
படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்
முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்
படித்ததை முடித்தால்
பல நாள் இனிக்கும்
பாய் விரித்தது பருவம்
பள்ளி கொண்டது இளமை
குரல் கொடுத்தது சேவல்
விழித்துக் கொண்டன கண்கள்
இருவர் : லாலல்லல்ல லல்லல்ல
லால்ல லாலலாலா லாலாலா