Paal Kudikkum Pillai Idhu

Paal Kudikkum Pillai Idhu Song Lyrics In English


பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
நன்மை நடக்கும் கொஞ்சம் நாள் பிடிக்கும்
இளங்கன்று நாளைக்கு களையெடுக்கும்
அன்று இனம் கண்டு எதிரிகள் தலையெடுக்கும்

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

தாய் இவளோ அழுதழுது கதறிவிட்டாள்
தன் தாய்ப்பாலை தரையெல்லாம் சிதற விட்டாள்
இருக்கின்ற பிள்ளை அதுவும் தெரியவில்லை
கணவன் இல்லையென்ற கதையை இவள் அறியவில்லை

சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது
அட சூரியனை பொத்தி வைக்க முடியாது

தந்தையினை வஞ்சகனே எரித்துவிட்டான்
தாயிடத்தில் கன்றை அவன் பிரித்துவிட்டான்
காலதேவன் இன்று மட்டும் சிரிப்பை விட்டான்
இவன் கொடுமைக்கு ஒரு தேதி இன்று குறித்துவிட்டான்

சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது
அட சூரியனை பொத்தி வைக்க முடியாது

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்




புலிக்கன்று நரிக் குகையில் வளர்ந்ததம்மா அதன்
புஜம் கண்டு மலைக்கூட மலைத்ததம்மா
காலமென்னும் சக்கரங்கள் உருண்டதம்மா
அந்த இளங்கன்று காளையென திரண்டதம்மா

சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது
அட சூரியனை பொத்தி வைக்க முடியாது

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்
நன்மை நடக்கும் கொஞ்சம் நாள் பிடிக்கும்
இளங்கன்று நாளைக்கு களையெடுக்கும்
அன்று இனம் கண்டு எதிரிகள் தலையெடுக்கும்

தந்தனன தந்தனனனா
தந்தனன தந்தனனனா
தந்தனன தந்தனனனா