Paar Magaley Paar |
---|
பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழல் இல்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
தாய் படுத்த படுக்கையினை
பார் மகளே பார்
அவள் தங்க முகம் கருகுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழல் இல்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
உண்பது என்று உணவை வைத்தால்
உன் முகத்தை காட்டுகிறாய்
உறக்கம் என்று படுக்கையை போட்டால்
ஓடி வந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய்
புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தை தனையே
என்ன செய்ய எண்ணுகிறாய்
என்ன செய்ய எண்ணுகிறாய்
பார் மகளே பார்
பார் மகளே பார்
தந்தை வாழ்வு
முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு
மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை
தந்தை வாழ்வு
முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு
மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம்
பிரிவதர்க்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று
ஓடிவிட்டாய் என் மகளே
ஓடிவிட்டாய் என் மகளே
பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழல் இல்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்