Paarthu Sirikithu Bommai |
---|
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
தடுமாறும் நிலைக் கண்டு
தன்னைப்போல் இவளும்
பொம்மை இனம் என்று
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
புத்தியுள்ள ஆண்களுக்கு சக்தியில்லை
அதனாலே குடும்பத்தில் குழப்பம்
சக்தியுள்ள ஆண்களுக்கு புத்தியில்லை
அதனாலே குடும்பத்தில் மயக்கம்
பிறர்க்காக வாழும் பேர்கள்
பிச்சைக் கொண்டு வாழும்போது
தனக்காக வாழும் வாழ்க்கை
தவறென்று ஆகாது
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு
சில யானைகள் பூனைகள் ஆகும்
சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
சில பூனைகள் யானைகள் ஆகும்
அரிச்சந்திரன் துன்பம் கொண்டான்
அது ரொம்ப பாவம்தான்
ஒரு பொய்யை சொல்லி இருந்தால்
அது கூட நியாயந்தான்
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
தடுமாறும் நிலைக் கண்டு
தன்னைப்போல் இவளும்
பொம்மை இனம் என்று
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை