Paasam Enbadhu Pon Vilangu |
---|
பாசம் என்பது பொன் விலங்கு
பாசம் என்பது பொன் விலங்கு
அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பாசம் என்பது பொன் விலங்கு
நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம்
நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம்
அதைப் போல் திசை பிரிந்த உறவினிலும்
தழைத்திருக்கும் பாசம் தழைத்திருக்கும் பாசம்
ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம்
ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம்
அதுதான் இளமை முதல் முதுமை வரை
தொடர்ந்து வரும் பாசம் தொடர்ந்து வரும் பாசம்
ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம்
ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம்
அடடா பறவைகளை சிறை பிடிக்கும்
வலைகளைப் போல் பாசம் வலைகளைப் போல் பாசம்
புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம்
புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம்
நெடுநாள் பகை வளர்த்த இதயங்களை
பிணைத்திருக்கும் பாசம் பிணைத்திருக்கும் பாசம்
ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்
ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்
அழியா இலக்கியம் போல் நிரந்தரமாய்
இருப்பதுதான் பாசம் இருப்பதுதான் பாசம்
பாசம் என்பது பொன் விலங்கு
அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பாசம் என்பது பொன் விலங்கு