Paavadai Panchavarnam

Paavadai Panchavarnam Song Lyrics In English


பாவாடை பஞ்சவரணம்
ஒரு பட்டாசு வீசி போகுதேஏஏஏ
சூடான முத்தம் தந்தாள்
இந்த சூரியனின் மீசை வேகுதேஏஏஏ

பட்டாம் பட்டாம் பட்டாம் பூச்சி
தொட்டா தொட்டா சினுங்கியாச்சு
மேனி எங்கும் உந்தன் ஆட்சி
மேலும் கீழும் கொதிக்கும் மூச்சு
அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்

பள பள பள பள
பளவென பல்லாலே
கல கல கல கல கல
கலவென சிரிச்சாலே
உச்சி பாதம் வரை மொய்க்காதேடீ
எச்சில் ஊறும்படி வைக்காதடீ

ஹேய் கொல கொல கொல கொல
கொழையாய் முந்திரிக்கா
தள தள தள தள தள
தளவென கத்திரிக்க
அதை வந்து வச்ச அச்சாரமே
மூழ்கி நான் எடுத்த முத்தாரமே

மண்ணோடு மழை போல
என்னோடு உறவாடு
பக்கத்தில் பல பொண்ணு
பத்தோடு பதினொன்னு
பதினாறு பழச்சாறு
நீ பார்வையால் பந்தாடு

அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்

பாவாடை பஞ்சவரணம்
ஒரு பட்டாசு வீசி போகுதேஏஏஏ
சூடான முத்தம் தந்தாள்
இந்த சூரியனின் மீசை வேகுதேஏஏஏ

ஜும்பலக்கா ஜும்பலக்கா லே
ஆ ஜும்பலே ஜும்பா லே லே
ஜும்பலக்கா ஜும்பலக்கா லே
ஆ ஜும்பலே ஜும்பா லே லே


துளி துளி துளி துளி
துளியாய் நீராடு
வெடி வெடி வெடி வெடி
வெடி மருந்தை போராடு

கந்தல் நோட்டெல்லாம்
செல்லாதுடா
பள்ளி பாடம் எல்லாம் பத்தாதுடா

விறு விறு விறு விறு
விறுவென முன்னேரு
விடு விடு விடு விடு
விடு உந்தன் கண்ணீரு

எந்தன் தோளின் மீது
பாரம் இல்லை
நீதி நியாயம் கேட்க
நேரம் இல்லை

கல்லூரி தேர் மீது
நான் போவேன் பூ மீது
அட பூவெல்லாம் நார் மீது
என் கோபம் யார் மீது
விரலோடு விரல் சேர்த்து
கும்மாளம் கூத்தாட

அட பெண்ணே உன் பேரு என்னம்மா
சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன்
அட பெண்ணே உன் வீடு எங்கம்மா
வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்