Pachai Kiligal Tholodu

Pachai Kiligal Tholodu Song Lyrics In English




பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை

சின்ன சிறு
கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன
அன்பில்தானே ஜீவன்
இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக்
கூட்டத்துக்கு பட்டா
எதுக்கு அட பாசம்
மட்டும் போதும்
கண்ணே காசு பணம்
என்னத்துக்கு

பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில்
ஆனந்தம் இந்த மண்ணில்
ஆனந்தம் அடி பூமிப் பந்தை
முட்டி வந்த புல்லில் ஆனந்தம்

வயலின் சுத்தம்
ஆனந்தம் மழையின்
சத்தம் ஆனந்தம் அட
மழையில் கூடச்
சாயம்போகா வானவில்
ஆனந்தம்


வாழ்வில் நூா்
ஆனந்தம் வாழ்வே
பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம்
ஆனந்தம்

பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில்
நான் வாழ்ந்தால் என்
முதுமை ஆனந்தம் நீ
இன்னொரு பிறவியில்
என்னைப் பெற்றால்
இன்னும் ஆனந்தம்

பனி கொட்டும்
மாதத்தில் உன் வெப்பம்
ஆனந்தம் என் காது
வரைக்கும் கம்பளி
போத்தும் கருணை
ஆனந்தம்

சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை