Pachchai Mohini |
---|
பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
இச்சை தீர்ந்ததும் மறந்தாயே
இந்த தேவதை விடுவாளோ
இந்த தேவதை விடுவாளோ
மேகத் தேரிலும் நான் வருவேன்
மின்னல் வேகத்தில் நான் வருவேன்
ராகமாகவும் நான் வருவேன்
நான்கு திசையிலும் நான் வருவேன்
மேகத் தேரிலும் நான் வருவேன்
மின்னல் வேகத்தில் நான் வருவேன்
ராகமாகவும் நான் வருவேன்
நான்கு திசையிலும் நான் வருவேன்
ஆடை மாற்றிடும் சுகம் போலே
நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ
ஆடை மாற்றிடும் சுகம் போலே
நீ ஆளை மாற்றிடும் ஜாதியன்றோ
வாடை பிடிப்பதில் மன்னனன்றோ
நீ மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ
மாயம் புரிந்திடும் கண்ணனன்றோ
பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
எனது மஞ்சள் நெருப்பாகும்
எனது குங்குமம் கணையாகும்
எனது பார்வை பலி கேட்கும்
நீ எங்கு போயினும் கூட வரும்
எனது மஞ்சள் நெருப்பாகும்
எனது குங்குமம் கணையாகும்
எனது பார்வை பலி கேட்கும்
நீ எங்கு போயினும் கூட வரும்
காம சாஸ்திரம் படிப்பவரே
காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா
காம சாஸ்திரம் படிப்பவரே
காளியின் சாஸ்திரம் படித்ததுண்டா
பாவம் என்பதை மறந்தவரே
பழி வாங்காமல் விடுவதுண்டா
பழி வாங்காமல் விடுவதுண்டா
பழி வாங்காமல் விடுவதுண்டா
பழி வாங்காமல் விடுவதுண்டா ஆஆ