Palapalapala Jilujilujilu

Palapalapala Jilujilujilu Song Lyrics In English


தங்கப்பன் மற்றும் குருவாயூர் பொன்னம்மாள்

பள பள பள
ஜிலு ஜிலு ஜிலு
ஹே பள பள பள
ஜிலு ஜிலு ஜிலு
பலூனை பாரு
சைனா பலூனை பாரு
ஜப்பான் பலூனை பாரு

பாத்தவுடன் பையன் மனசு
துடிக்கிது பாரு
வாங்க துடிக்கிது பாரு
பாத்தவுடன் பையன் மனசு
துடிக்கிது பாரு
வாங்க துடிக்கிது பாரு

ஹேய் தம்பிஈ
பைசா கொடுத்து வாங்கி விட்டா
கிளம்புது பாரு மேலே
கிளம்புது பாரு
இப்ப பாரு ஏ தம்பி
அட நல்லா பாரப்பா

பைசா கொடுத்து வாங்கி விட்டா
கிளம்புது பாரு மேலே
கிளம்புது பாரு
நைசாகவே காத்து வாக்கில்
நழுவுது பாரு
தம்பி நழுவுது பாரு
நைசாகவே காத்து வாக்கில்
நழுவுது பாரு
தம்பி நழுவுது பாரு

நீளமான பொடலங்காய போல
தோற்றம் கொடுக்கும்
இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா
பாம்பு படம் எடுக்கும்
இது நாலு அஞ்சு ஒன்னா சேர்ந்தா
பாம்பு படம் எடுக்கும்

இது வாயாலே
இது வாயாலே காத்த புடிச்சி
வயிறு உப்பி பெருக்கும்
இது வாயாலே காத்த புடிச்சி
வயிறு உப்பி பெருக்கும்
நீயும் நானும் நெனக்கும் முன்னே

தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்

மாதிரிக்கி கொஞ்சம் தாரேன்
திண்ணுப் பாருங்கஹான்
மாதிரிக்கி கொஞ்சம் தாரேன்
திண்ணுப் பாருங்க
இதன் நெடி பட்டா போதும்
நாக்குத் தண்ணி ஊறுங்க

தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்

வீதியில விக்கிதுன்னு
எளப்பமாகவே
நீங்க எண்ண வேணாங்க

வீதியில விக்கிதுன்னு
எளப்பமாகவே
நீங்க எண்ண வேணாங்க
வேறு எங்கும் இது போலே அகப்படாதுங்க
நைனா அகப்படாதுங்க

தேங்கா மாங்கா சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்
பாங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
பதமாய் செய்த சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
இது பட்டாணி கடலை சுண்டல்
தேங்கா மாங்கா சுண்டல்


ஆஹா ஆ ஆ ஆஅஹேய்
ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்

கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்

புளிக்காத நல்ல பழம்
புழுவில்லாத இந்த பழம்

இருவர் : ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

வா வாத்தியாரே
தேன் போல இனிக்கும் பழம்
திகட்டாத ஒசந்த பழம்

தேன் போல இனிக்கும் பழம்
திகட்டாத ஒசந்த பழம்

போனா வராதுங்க
பொழுது போச்சு ஓடி வாங்க

இருவர் : ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா ஆழாக்கு ஒரணா

வா நைனா

இருவர் : கடப்பா எலந்த பழம்
காட்டிலே விளஞ்ச பழம்
புளிக்காத நல்ல பழம்
புழுவில்லாத இந்த பழம்

ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா
ஆழாக்கு ஒரணா