Para Para Male

Para Para Male Song Lyrics In English


இசை அமைப்பாளர் : என் ஆர் ரகுநந்தன்

பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு
நீயே காதல் தாயடி

உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும்
இருமுறை ஒரு வானவில் வருமா

பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

தேவாலயம் மெழுகும் நானே
திரி ஏறும் தீயும் நீயே
என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே

மீன் கொத்த செல்லும் பறவை
மீன் வலையில் விழுந்தது போல
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே

மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி


பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

என் உலகம் கைவசம் இல்லை
என் பெயரும் ஞாபகம் இல்லை
சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்

பெற்றவரை வீட்டில் மறந்தேன்
மற்றவரை ரோட்டில் மறந்தேன்
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்

மங்கை என் குரல் கேளடி
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
எனது அசுத்தங்கள் பாரடி
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி

பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பர பர பர பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா