Parakkum Paingili Sirikkum Poongodi |
|---|
ஹேய் பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா
பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா
அஞ்சி அஞ்சி இளம் வஞ்சி வந்து
எனை கெஞ்சி கெஞ்சி தொடச் சொன்னால்
தொடலாமோ
ஆண்கள் என்ற இனம் ஆவதில்லையென
அன்று சொன்ன மொழி காற்றில் விடலாமோ
சின்ன பூமேனி தாளாமல் போராடுமோ
இனி முன் போல என்னோடு வாயாடுமோ
பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா
மங்கை என்ற குலம்
மஞ்சள் நூலை இடும்
மன்னன் கைகள் தொட
மண் மேல் பிறந்ததம்மா
நேற்று இன்று அல்ல ஒரு கோடி யுகம்
பார்த்து சலித்த கதை உனக்கேன்
மறந்ததம்மா
தாளம் கூடாது என்கின்ற
பாட்டேதம்மா
தென்றல் தொடும் போது
விரும்பாத பூவேதம்மா
பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா
அல்லி நாடகத்தை
ஆடிப் பார்க்கும் இந்த
வள்ளி உன்னை இந்த ஆண்மை
வெல்லுமம்மா
அந்தி நேரம் தமிழ்
சிந்து பாடி வரும்
மந்த மாருதத்தை
கேட்டால் சொல்லுமம்மா
சேவல் கூவாமல்
பொழுதென்றும் விடியாதம்மா
நான் உதவாமல் உன்னாலே
முடியாதம்மா
பறக்கும் பைங்கிளி
சிரிக்கும் பூங்கொடி
வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா
மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில்
துணைக்கு நான் தேவையம்மா
