Pathodu Onnu Seruthu |
---|
ஏபத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
ஏபத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்
பத்திரமா கூடு சேருமோ
பாதையிலே மாறிப் போகுமோ
பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
அரிசி பருப்பு வெலை எல்லாம்
ஏறிப் போச்சு தெரியுமா
மாங்கா தேங்கா வெலை எல்லாம்
மரத்து மேல நிக்குதம்மா
பொழுது புலரும் முன்னாலே
நீ போயி நிக்கணும் க்யூவிலே
அடிச்சு புடிச்சு நின்னாத்தான்
எடமும் கிடைக்கும் பஸ்ஸுலே
அம்மம்மா என்னம்மா பாரம்மா கேளம்மா
ஏய் நீ பட்டணத்த தெரிஞ்சுக்கோமா
பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
கூவம் நதி ஓரமா
வீடிருக்கு வேணுமா
கொறஞ்சதுதான் வாடகை
நூறு ரூபா தானம்மா
கழுத புள்ள தூங்காது
மூட்ட கடி தாங்காது
கதவு ஜன்னல் பூட்டாது
பூட்டிக்கிட்டா தெறக்காது
தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா
ஏய் பட்டணத்த பாக்க வேணுமா
பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
லல்லா லல்லே லலல லல்லே
லல்லா லல்லே லலல லல்லே லல்லா லல்லா லா
கீழும் மேலும் வால் போஸ்ட
ஒரு கழுத பாக்குது
ஹீரோயினு பேரு என்ன
மறு கழுத கேக்குது
அக்கம் பக்கம் திரும்புது
அருகில் போயி நிக்குது
ஆசையோடு கனைக்குது
அய்யோ முத்தம் கொடுக்குது
தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா
ஏய் பட்டணத்த பாக்க வேணுமா
பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்
பத்திரமா கூடு சேருமோ
பாதையிலே மாறிப் போகுமோ
பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது