Pathu Malai

Pathu Malai Song Lyrics In English


எம் எஸ் விஸ்வநாதன், எல் ஆர் ஈஸ்வரி,

டி எம் சௌந்தரராஜன் மற்றும் பெங்களூர் ஏ ஆர் ரமணி அம்மாள்

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்

ஓம் ஓம் ஓம்

அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்

ஓம் ஓம் ஓம்

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்

ஓம் ஓம் ஓம்

அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்

ஓம் ஓம் ஓம்

இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ்ப் பாடி நிற்போம்

ஓம் ஓம் ஓம்

இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்

ஓம் ஓம் ஓம்

இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ் பாடி நிற்போம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்

வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
அ அ ஆ அ அ ஆ ஆ ஆ அ ஆ
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும்
யோகத்தைத் தந்தவன்டி

வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே

வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே

வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா

அரோகரா அரோகரா

வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக
ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி

முருகாமுருகாமுருகாமுருகா

கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி

ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி முருகா
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல்
அண்டி வந்தோம் மருகி

இருவர் : வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா

கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா
வானத்தில் உன் ஒளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு

கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு

பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி

கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி

தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி

தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி


பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான்

ஆனந்த தெரிசனம் காணுகின்றோம்
அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம்
ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்

வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்

அரோகரா

அரோகரா

அரோகரா

அரோகரா

நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா

வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே

கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்

அரோகரா

அரோகரா

அரோகரா

அரோகரா

முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா

கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா

முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா

கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா

கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா

கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா

திருமுத்துக்குமரா உமைபாலா
வள்ளியம்மை நாயகா

தெய்வானைக் காவலா

வந்தருள்வாய் வடிவேலா

வடிவேலா

வடிவேலா வடிவேலா

அரோகரா

வடிவேலா வடிவேலா

அரோகரா

வடிவேலா வடிவேலா

அரோகரா

வடிவேலா வடிவேலா

அரோகரா

வடிவேலா வடிவேலா வடிவேலா