Pattupoochi Pattupoochi

Pattupoochi Pattupoochi Song Lyrics In English

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா

வசந்தம் வந்ததோ அடடா காதல் மயக்கம் வாழும் காலம் வரைக்கும் வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம் வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா வசந்தம் வந்ததோ வசந்தம் வந்ததோ

காவியம் போலொரு காதலை பாடிட கவிக் குயில் போராடுது தாவணி மூடிய தாமரை பூங்கொடி தலைவனின் துணைத் தேடுது

பதினாறு வயது சிட்டு பனித் தூங்கும் முல்லை மொட்டு அழகான கன்னம் தொட்டு அடையாள சின்னம் இட்டு விளையாடும் பொழுதல்லவோ

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா

ஏங்கிய பூவிழி தூங்குது போதையில் இளமையின் தாலாட்டிலே வாலிபம் மீறிட ஆசைகள் வேர்விட இளந்தளிர் நீராடுது

இலை விட்டு கிளையும் விட்டு இரு பக்கம் காயும் விட்டு நடை போடும் கொடியைத் தொட்டு கொஞ்சத்தான் நாணம் விட்டு உறவாடும் நாள் அல்லவோ

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பூவெல்லாம் பூவெல்லாம் தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச அம்மம்மா அம்மம்மா

வசந்தம் வந்ததோ அடடா காதல் மயக்கம் வாழும் காலம் வரைக்கும் வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம் வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்

லாலல லாலல லாலா லா லாலல லாலல லாலா லா இருவர் : லாலல லாலல லாலா லா