Pazhagum Thamizhe

Pazhagum Thamizhe Song Lyrics In English


பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா

பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே

வேலால் எறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்
வேலால் எறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்

பால் போல் தெளிந்த முகமும்
பால் போல் தெளிந்த முகமும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையை கண்டதினாலே
சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையை கண்டதினாலே

நித்திரை தீர்ந்தது கனியே
நித்திரை தீர்ந்தது கனியே
உன் நினைவில் மீண்டது மனமே

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா


பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே

வளரும் காதலின் எல்லை
இதை மறுப்பவர் யாரும் இல்லை
வளரும் காதலின் எல்லை
இதை மறுப்பவர் யாரும் இல்லை

மலரும் காதல் மலரும்
மலரும் காதல் மலரும்

நம் வாழ்வினில் அமைதி நிலவும்

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா

பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே