Pazhum Vayiruthan

Pazhum Vayiruthan Song Lyrics In English


பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க கூலிக்காரன்கூலிக்காரன்

நெத்தி வேர்வையை நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன் நித்தம் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன்

பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

மாடிகளின் ஒசரம் மட்டும் ஒசந்து கிட்டே போகுதடா குடிசைகளின் ஓலை மட்டும் அழுது கிட்டே வாடுதடா

மேடையும் போடுறாங்க ஓஓ ஏதேதோ பேசுறாங்க ஓஓ சுவரெழுத்து காயலீங்க தலையெழுத்து மாறலீங்க சுவரெழுத்து காயலீங்க தலையெழுத்து மாறலீங்க

பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க


ஆடுமாடாப் பொறந்திருந்தா தழையைக்கூடத் தின்னுடலாம் மனிதர்களாப் பொறந்துவிட்டோம் கூழுக்குத்தான் வாடுகிறோம்

வயித்ததான் கழுவிடவே ஓஓ கயித்துலதான் நடக்குறாங்க ஓஓ படைச்சவனோ வெளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான் படைச்சவனோ வெளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான்

பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

கூலிக்காரன்கூலிக்காரன் கூலிக்காரன்கூலிக்காரன்