Pengal Veettin Kangal

Pengal Veettin Kangal Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா

பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா

சொந்தக்கால் கொண்டு நில்லுங்கள்
என்று தாய்மை சொன்னாலும்
பந்தக்கால் தந்த பாசங்கள் நெஞ்சில்
பாடும் எந்நாளும்

தப்புக்கள் யாரோ செய்தாலும்
தண்டனை பெண் மேல் உண்டாகும்
காலம் வரும் பின்னாலே
வாழ்வு வரும் தன்னாலே


பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா

பெண்ணென்றால் வெறும்
பொம்மைகள் என்று பேசி வந்தார்கள்
எண்ணம்போல் இந்த மண்ணில் மேல்
முன்பு வீசி வந்தார்கள்

காலங்கள் இப்போ வேறாச்சு
ஆணுக்கு பெண்மை நிகராச்சு
காரணங்கள் இல்லாது
காலில் விழக் கூடாது

பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா