Penne Penne Undhan

Penne Penne Undhan Song Lyrics In English


பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

மாட்டிப்புட்டேன் உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்

மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்

பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

அடி முட்டாள் காதலியே
சீக்கிரம் வந்துத் தொலையேன்
ரத்தம் சிந்திக் கதறியதே
என் விரல் நகமே

ரத்தம் சிந்தும் நகமே
நான் உன் வலிகளை அறிவேன்
காதலன் காத்திருக்க என்றும்
காதலி வரமே

என் பார்வை சுமை ஏறி
கடிகார முள்ளும்
தள்ளாடித் தடுமாறுதே

கடிகார முள் கூட
பெண் தானா என்ன
வெட்கத்தில் திண்டாடுதே

பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா


ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
சலித்துப் போகுதடி பெண்ணே
உன்னை காதல் செய்வதர்க்கு

ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
பிடித்துப் போகுதடா கண்ணே
உனை காதல் செய்வதர்க்கு

கரை சேரும் அலை அடங்க
நான் என்றும் உன்னை
தொடரக் கூடாதா

கரை வேறு அலை வேறு
கடல் அலை நாம்தான்
சேர்ந்தேதான் இருப்போம் தெரியாதா

பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா

அய்யோ மாட்டிப்புட்டேன்
உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்

மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்

பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி

உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா