Perunthil Nee Enakku

Perunthil Nee Enakku Song Lyrics In English


பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம் விளையாட்டு
பிள்ளைகளின் செல்ல கோபம்

ஆள் இல்லா நல்
இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்

ஹ்ம்ம் பேருந்தில்
நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
வாசல் முற்றத்திலே துளசி
மாடம்

பயணத்தில்
வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற
முதல் கூச்சம்

பரீட்சைக்கு
படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும்
முதல் மாலை

புகை படம் எடுக்கையில்
திணறும் புன்னகை அன்பே
அன்பே நீதானே அடை மழை
நேரத்தில் பருகும் தேநீர் அன்பே
அன்பே நீதானே

ஹ்ம்ம் ம்ம்ம்
தினமும் காலையில்
எனது வாசலில் இருக்கும்
நாளிதழ் நீதானே

பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்

பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்




தாய் மடி தருகிற
அரவணைப்பு உறங்கிடும்
குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய் பிறை போல்
வரும் நக கணுக்கள் வகுப்பறை
மேஜையில் இடும் கிறுக்கல்

செல் போன் சிணுங்கிட
கூவுகிற கவனம் அன்பே அன்பே
நீதானே பிடித்தவர் தருகிற பரிசு
பொருளும் அன்பே அன்பே நீதானே

ஹ்ம்ம் ம்ம் எழுதும்
கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே

பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் பின் வாசல்
முற்றத்திலே துளசி மாடம்

ஆஆ ஆஆ பேருந்தில்
நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
வாசல் முற்றத்திலே துளசி
மாடம்

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம் விளையாட்டு
பிள்ளைகளின் செல்ல கோபம்

ஆள் இல்லா நல்
இரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆஆ பேருந்தில் நீ
எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்

விஷ்லிங் :

Tags