Petha Manasu

Petha Manasu Song Lyrics In English

ஓஓஹ்ஓஹ்ஓஓஹ்ஓஒஹ் ஆஅஆஆஅஆஅ

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா தெய்வம் அது தாயிக்கும் கீழதான் எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான் அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான் எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா

வெறும் கைய வீசிக் கொண்டு வெறகு சொமந்து வித்து இரவா பகலா தெனம் தெனம் ஒழச்சதும் சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சு தந்து பசியே தெரியா மகனா வளத்ததும்

எத்தன தாயிங்க நம்ம தமிழ் நாட்டிலே என் தாயி அவளப் போல் யாரு இந்த ஊரிலே தியாகி யாரு தியாகி யாரும் இல்லே போடா தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா அவதான் கோயில் அவதான் ஒலகம்

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா

மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான் மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்னேதான் பல வித மரங்கள் என்ன மரத்துல பழங்கள் என்ன நெறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்

பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனே தான்டா கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தான்டா அவனே மனிதன் அதை நீ உணரு