Pichandi Thannai Kandu

Pichandi Thannai Kandu Song Lyrics In English


பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள் இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள் இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள் இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள் இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள் இப்போது திருவோடு ஏந்திய கைகள் எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள் இப்போது திருவோடு ஏந்திய கைகள் கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள் கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள் கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்


ஆண்டவன் என்று சிலர் என்னை அழைப்பார் ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான் சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

மைத்துனன் வீட்டில் எல்லாம் விருந்து கொள்வார் இந்த மாடோட்டி பிச்சையென்று வந்து நிற்கின்றான் கைத்தலம் பார்த்துக் கொஞ்சம் கருணை செய்வாய் இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய் இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்