Pinju Mazhai Charal

Pinju Mazhai Charal Song Lyrics In English


பிஞ்சு மழை சாரல்
கொஞ்சு தமிழ் பேசும்
கொஞ்சு தமிழ் பேச
நெஞ்சில் புது ராகம்
இங்கு மேகங்களை அள்ளி
கொஞ்சும் வெள்ளி நிலவே
முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
உள்ளம் ஊஞ்சல் ஆடுதே

ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ

மழை மழையாய் பொழிகிறதே
மனசே குடையை தேடாதே
மலை அருவி வழிகிறதே
இமையே விழியை மூடாதே
கடல் நீரிலே நுரை பூக்களாம்
நுரை பூக்களை சரம் கோர்க்கலாம்
தளிர் ஓரமாய் பனி பார்க்கலாம்
பனி சீண்டியே உயிர் வேர்க்கலாம்

இனி ஆதாலால்
இனி ஆதாலால்
சிறகாகலாம்
சிறகாகலாம்
இசை ஆளலாம்

ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ

பிஞ்சு மழை சாரல்
கொஞ்சு தமிழ் பேசும்
கொஞ்சு தமிழ் பேச
நெஞ்சில் புது ராகம்


வரி வரியாய் எழுதிடவே
நிலவும் கவிதை தாள்தானே
முழுவதுமாய் தொலைந்திடலாம்
இயற்க்கை மடியில் சேய்தானே
மலை ஏறலாம் குளிர் சூழ நாம்
குயில் பாட்டிலே பசி ஆறலாம்
விரல் சேரலாம் நிழல் மீறலாம்
இமையோரமாய் உயிர் ஊறலாம்

புதிர் போடாலாம்
புதிர் போடாலாம்
விடை தேடலாம்
விடை தேடலாம்
புவி ஆளலாம்

பிஞ்சு மழை சாரல்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
கொஞ்சு தமிழ் பேசும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
கொஞ்சு தமிழ் பேச
நெஞ்சில் புது ராகம்

இங்கு மேகங்களை அள்ளி
கொஞ்சம் வெள்ளி நிலவே
ஹோ ஹோ
முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
ஹோ ஹோ
முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
ஹோ ஹோ
ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
ஹோ ஹோ
உள்ளம் ஊஞ்சல் ஆடுதே

ஆண் மற்றும் ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ