Piriyadha Enna

Piriyadha Enna Song Lyrics In English


ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல

ஒலகமே நமக்குத்தான்
நீ கூட இருந்துட்டா
சொர்க்கமே தொறக்குதா
உன் கூட நடந்துட்டா

உசுரெல்லாம் இனிக்குதா
உன் தோளில் சாஞ்சிட்டா
சிறகுதா முளைக்குதா
உன் கைய பிடிச்சிட்டா

ஒரு வார்த்தைக்கூட
இங்கு சொல்ல தேவை இல்ல
காதல் இதுதான்

பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

கையால நானும்
மேகத்த தட்டுறவன்
நீ மட்டும் பார்த்த
கை கட்டி நிக்குறவன்


என் பேர நானும்
எப்போதும் சொன்னது இல்ல
உன் பேர சேர்த்து
சொல்லாத நாளும் இல்ல

ஈரேழு ஜென்மம் தாண்டி
ஒன்ன தோளில் தாங்கனும்
தள்ளாடும் போதும்
கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்

உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்

பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

இருவர் : பிரியாத என்ன
எப்போதும் நீதான் நெனைப்புல
கொறையாமா உன்ன
நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஏதேதோ ஆசை நெஞ்சுல
சொல்லத்தான் தெரியல
உன்னால கண்ணு தூங்கல
எதுக்குன்னு புரியல
எதுக்குன்னு புரியல