Pon Veenaye Ennodu

Pon Veenaye Ennodu Song Lyrics In English


பாடலாசிரியர் : வைரமுத்து

பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்

அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா

உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல

நீரில்லையே மீனில்லையே நீயில்லையே நானில்லையே உனது அழகு மனதை உழுது செல்லும் உள்ளத்தில் இன்பம் துள்ளும்

அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்


அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா



காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும் எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும் எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்

உன் கூந்தலில் பூ வைக்கிறாய் என் நெஞ்சிலே தீ வைக்கிறாய் காதல் நெருப்பில் கடலும் எரியும் போது கற்பூரம் என்னாவது

அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்