Ponna Porandha

Ponna Porandha Song Lyrics In English


பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா

பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

காற்றோடு வெயிலோடு
மழை வந்த போதும்
தாங்கும் மண் தாய் போல
பெண் அவள்

கல்லோடு புல்லோடு
தனை தோண்டும் போதும்
தடுக்காத மண் போல
பெண் அவள்

சுமைகளை தாங்காத
சுமைதாங்கி உண்டோ
சுமை கண்டு சோர்கின்ற
பெண் எங்கு உண்டோ

கண்ணுக்குள்ளே
கண்ணீரின் ஆறொன்று
கன்னத்திலே பாயாமல்
பாப்பாளே

பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்


உனை நம்பி உள்ளோரை
நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள்
உனைக் காக்குமா

அவள் கண்ட துன்பத்தில்
உன் பங்கு இல்லை
இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

அப்போதும் உன் போதை
தவறான போதை
இப்போதும் உன் பாதை
தவறான பாதை

தன் கடமை தவறிடும்
பேர்க்கெல்லாம்
வேண்டியதை தெய்வங்கள்
காட்டாது

பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மாஆ

பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்