Ponnar Meniyane Pulitholai

Ponnar Meniyane Pulitholai Song Lyrics In English


பொன்னார் மேனியனே பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே பொன்னார் மேனியனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

பொன்னார் மேனியனே

நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும் குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும் குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா மறிசேர் அங்கையனே ஆஅஆ மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே


பொன்னார் மேனியனே

ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே